கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு.. முக கவசம் , சமூக இடைவெளி கட்டாயம்.!!

கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் கடும் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன.

அறிகுறி இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். இதனையடுத்து தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விதிக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அதன்படி பிற்பகல் 2 மணி வரை வங்கிகளும், இரவு 8 மணி வரை கடைகளும் திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ” நிஃபா வைரஸ் தொடர்பாக 61 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தொற்று எதுவும் இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று எதுவும் இல்லை என முடிவுகள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் பொது டிஅங்கைல் மக்கள் கூடுவதற்கு தடை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் முகக்கவசம் கட்டாயம் . பாதிப்புக்கள் இல்லாததால் மாநிலம் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ” கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 சதவீதமாக இருந்து வரும் நிலையில், நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான monoclonal antibody மருந்து 20 டோஸ்களை மத்திய அரசு வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி, தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.