கோவையில் ஒருங்கிணைந்த ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு: 5 மையங்களில் நடக்கிறது..!!

கோவை மாவட்ட கலெக்டர் ஜி. எஸ். சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற 4-ந் தேதி (ஞாயிறு) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான கோவை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு 1,856 பேர் எழுத உள்ளனர் .இதற்காக தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 2உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், 78 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 78 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பார்கள் மூலமும் மொத்தம் 156 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆய்வு அலுவலர் ஒருவர் இந்த தேர்வை ஆய்வு செய்வார். தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் .இந்த தேர்வு மையங்களில் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன .மேலும் தேர்வு மையங்களுக்கு செல்ல உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ,சூலூர், காந்திபுரம் மற்றும் பொள்ளாச்சி போன்ற பஸ் நிலையிலிருந்தும், வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கும், பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுதும் தேர்வகர்கள்நுழைவு சீட்டுடன் கூடத்திற்கு தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவளாகத்திற்குள் வந்து விட வேண்டும். தேர்வு வளகத்திற்குள் மொபைல்போன்’ டிஜிட்டல் கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இத்தேர்வகர்கள் கருப்புமை, பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், ஆதார் கார்டு ,ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்காடு, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒன்று மத்திய மாநில அரசுகள் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று ‘மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வர வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.