கிறிஸ்தவ பறையர்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;-தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ பறையர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்திருக்க வேண்டும்.
ஆனால் ஒருவர் கூட இல்லாதது சமூக அநீதியாகவும். மேலும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய வகையில் இருக்கும் திருச்சி கிழக்கு, லால்குடி, தஞ்சாவூர்,திருவையாறு, திருவிடைமருதூர்,வேலூர், விழுப்புரம், முகையூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், நீலகிரி, கம்பம், விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளிலும் ஒருவர் கூட எமது கிறிஸ்தவ பறையர் சமூகத்தினர் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.
அதேபோன்று சிறுபான்மையினருக்கான ஆலயத்திலும் கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. இந்த அநீதிகளை களைய தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம். உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த இயக்கம் தனியாக நின்று எங்கள் பலம் என்ன என்று காண்பிப்போம் என்றார்.