தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப் 20) மட்டும் புதிதாக 228 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், சென்னையில் மட்டும் 79 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு 17,277 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சுற்றுப்புறத்தையும் பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார். இதனிடையே, நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டி அளித்த பொது மருத்துவர் சரவண பாரதி, டெங்கு காய்ச்சல், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்றார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
டெங்குவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை







