தீபாவளியை முன்னிட்டு இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், தீபாவளியை முன்னிட்டு உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த பணியை ஈடுகட்ட வரும் 28ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றங்கள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது






