அழகிகளை காட்டி விபச்சார அழைப்பு : 2 இளம்பெண்கள் மீட்பு – 3 பேர் கைது.!!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்.ஆகியோர் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அழகிகளை காட்டி விபசார அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 29) விருதுநகர் சின்ன கருப்பு (வயது 21 ) திருப்பூர் வெள்ளியம்பாளையம் விக்னேஸ்வரன் ( வயது 29) மேலப்பாளையம் ரவிக்குமார் மனைவி வசந்தி ( வயது 43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த அழகிகள் ஈரோடு பூர்ணிமா தேவி (வயது 21) விருதுநகர் தெரசா பாரதி (வயது 25 ) ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..