கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் கைது.!!

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் – சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் பிச்சுவா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்த தனஞ்செயன் என்ற தொட்டி ஜெயா (வயது 34 ) நாராயணசாமி நகரை சேர்ந்த பொன்மணி என்ற சூர்யா (வயது 23)கண்மணி என்ற கணேஷ் (வயது 21)பேரூர் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற டிரை டோல் கார்த்தி (வயது 24) செட்டி வீதியை சேர்ந்த கண்ணதாசன் ( வயது 26) என்பது தெரியவந்தது..இவர்களிடமிருந்து 5 கத்தி, 2 செல்போன் 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர். 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..