அளவுக்கு அதிகமாக மது அருந்திய கோவை எஸ்.பி. அலுவலக ஊழியர் திடீர் மரணம்..

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 59 )இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “டேட்டா “பதிவு ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார் .எஸ் . பி . அலுவலகம் அருகே உள்ள வருவாய் ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். நேற்று காலையில் அவரது அறையில் தங்கி உள்ள அறிவழகன் அவரை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அவரது மனைவி சுமிதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..