கோவை அவிநாசி ரோடு லட்சுமிமில் சந்திப்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 -வது மாடியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்பாக இதை நடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 30) தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் ( வயது 27)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
இதே போல பீளமேடு டாக்டர் .ஜெகநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியதாக உடுமலையை சேர்ந்த விவேக் ( வயது 26) சூலூர் முத்து கவுண்டர் புதுரை சேர்ந்த ஈஸ்வரன் ( வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த ஒரு அழகி மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.