கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம், தாமோதர சாமி லேஅவுட்டை சேர்ந்தவர் ராமநாதன் ( வயது 58) இவர் கடந்த 25ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ரூ32 ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராமநாதன் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல அதே வீதியில் உள்ள பக்கத்து வீட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ் ( வயது 31 )இவர் 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் .வெள்ளி பொருட்கள் பணம் ரூ 50 ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவிந்தராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.