டெல்லி: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று வந்த இந்திய அணி வீரர் , வீராங்கனை நேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
அவர்களை செஸ் காயின்களை நகர்த்த வைத்து மகிழ்ந்த அவர், வீரர்களுடன் கைகுழுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் முதல்முறையாக சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் தக்க வைத்திருக்கிறது. இந்த போட்யில் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் தனி நபர் ஆட்டத்துக்கு தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில் வெற்றிபெற்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் வீரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் இளம் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகாய்சி இருவரும் செஸ் விளையாட அதை உற்சாகத்துடன் ரசித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைக்கு 3.2 கோடி பரிசு தொகையை இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரர் வீராங்கனைக்கும் பரிசு தொகையாக ரூ.25 லட்சம் கிடைக்கும்.
Leave a Reply