தேசிய மேடையில் வால்பாறைக்கு பெருமை! – டெல்லி அணிவகுப்புக்கு தேர்வான இரு மாணவர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் எஸ்.நிஷான் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி எஸ்.நிசாந்தினி ஆகிய இருவரும் டெல்லியில் தென் மண்டல அளவில் நடைபெறவுள்ள ஜனவரி 26 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் அதற்காக சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.11.2026 முதல் 02.12.2027 நடைபெறும் பயிற்சியில் மாணவர் நிசான் மற்றும் குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் 22.12.2026 முதல் 30.12.2026 வரை நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருக்கும் மாணவி நிசாந்தினி ஆகிய இருவருக்கும் கல்லூரி முதல்வர் ஷீலாபானு, கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் சக கல்லூரி மாணவர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்..