அரசு பஸ்சிலிருந்து பெண்ணை கீழே தள்ளிய டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு..!

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் வி.ஜ.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லட்சுமி ( வயது 50 )இவர் நேற்று குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக பட்டணத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் (எண் 69 )அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.பஸ் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சென்றபோது லட்சுமி பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார் . இந்த இடத்தில் ஸ்டாப் கிடையாது. பஸ்சை நிறுத்த முடியாது என்றார் .இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .பின்னர் அவரது குடும்பத்தினர் பஸ்சைவிட்டு கீழே இறங்கினார்கள். லட்சுமியின் மகன் மட்டும் கீழே இறங்காமல் பஸ் டிரைவர் கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.இதை பார்த்த லட்சுமியும் பஸ்சில் ஏறி டிரைவரை கண்டித்தார். அந்த நேரத்தில் பஸ் டிரைவரும் ,கண்டக்டர் சேர்ந்து லட்சுமியை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .இது குறித்து லட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்,பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்