போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் சிறையில் அடைப்பு.!

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார் ( வயது 45) இவர் கடந்த 15 ஆம் தேதி இரவில் கணபதி போலீஸ் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் (வயது 52)என்பவர் அவரது தாயாரை அடித்து கொடுமைபடுத்துவதாக வந்த தகவல் பேரில் அங்கு சென்றார். .தகராறு செய்த முருகனிடம் ஏட்டு ரவிக்குமார் விசாரித்தார். அப்போது, முருகன் , ஏட்டு ரவிக்குமாரை கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.இது குறித்து சரவணம்பட்டி போலீசில் பெற்று ஏட்டு ரவிக்குமார் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனை கைது செய்தனர் .இவர் மீது கொலை மிரட்டல் ,அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல், தாக்குதல் ,உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.