கோவை டாடாபாத் 3 -வது விதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52) இவர் கோவை பெரிய கடை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார் அப்போது அவரது கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது 2 பேர்அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் செந்தில்குமாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து செந்தில்குமார் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி ராமதாஸ் வீதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 24) அரியலூர் செங்குந்தாபுரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் ( வயது 24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பட்டப் படிப்பு படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.இவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.