கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளை கண்காணிக்க தனி குழுக்கள்: ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.!!

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக கண்காணிக்க தனி குழுக்கள் நியமிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் தெரிவித்த்திருக்கிறார்.

அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீதான புகாருக்கு பிரத்யேக தொலைபேசி எண் இன்று அறிவிக்கப்பட உள்ளது.