கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்று …

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மைத் தொற்று உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: குரங்கு அம்மை அறிகுறி தெரியும் நபர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்துள்ளளார். அவர் அங்கு குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்துள்ளளார். அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். இதன் முடிவுக்ள் தெரிந்தபின் தான் அவருக்கு தொற்று உள்ளதா என்பது தெரியும்.