போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு- இலங்கையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை..!

Sri Lanka flag waving cloudy sky background realistic 3d illustration

சமீபத்தில், இலங்கை நாடு பொருளாதார நெடிக்கடில் சிக்கியதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே, அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே மாளிகைகளை தீயிட்டுக் கொளுத்தினர். அவர்கள் வெளி நாட்டிற்குச் தப்பிச் சென்ற நிலையில், சொந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பினர்.

இலங்கை நாட்டின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட போதிலும், கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் அந்த நாடு மீளவில்லை.

இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், இடதுசாரி கட்சி, எதிர்க்கட்சியான ஜனதா விமுதி பெரமுனா ஆகிய கட்சிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனால் மக்கள் கொழும்பு நோக்கி பேரணியாகச் சென்றனர். நிலைமை இன்னும் சீரமையாத நிலையில் மீண்டும் அங்குப் போராடம் வெடிக்கக் கூடும் என்பதால் கொழும்புவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.