நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் – அமித்ஷா தகவல்.!!

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2024க்குள், என்ஐஏவின் செயல்பாடு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். உலகின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக NIA ஆனது. சிறிய தவறுகள் இருந்தபோதிலும், என்ஐஏ தனது முழு நோக்கங்களையும் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அமித்ஷா கூறினார்.

எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும். 2019க்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ரூ.57,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் இல்லாத கொள்கையை மோடி அரசு கடைபிடித்து வருகிறது. பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக மற்ற நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுடன் என்ஐஏ நல்லுறவை ஏற்படுத்தி வருகிறது என்றார்.