கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர் வி.கே.வி. அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 38 )கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் மையம் நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் ரூ..20 ஆயிரம் ரொக்கபணம்ஆகியவற்றை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply