தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் மிக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக அந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்துள்ளது. “பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவை வணிகத்திற்கு அப்பாற்பட்டது என்பதால், அதற்கு எந்தவொரு அடிப்படை உரிமையும் கோர முடியாது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு தமிழக அரசுக்கும், ஆன்லைன் சூதாட்டத்தால் தவித்த லட்சக்கணக்கான குடும்பங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!








