கோவையில் புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று-உயிர்பலி இல்லை..!!

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 319 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 798 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிர் பலி எதுவும் நிகழவில்லை.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:- கோவையில் கொரோனா தொற்று ஏற்படுவதில் 80 சதவீதம் பேருக்கு மிக குறைந்த பாதிப்பு உள்ளது. 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது .இதனால் அச்சப்பட தேவையில்லை. பொது மக்கள் கண்டிப்பாக 2 தடவை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.  அவர்கள் கூறினார்கள்.