கோவையில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது…

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில் நடப்பாண்டில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து பொருட்களை மீட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது..இந்தக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவை மாநகரில் போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.மேலும் விபத்துபலி, கொலைகள், திருட்டு போன்ற குற்றங்களின் எண்ணிக்கையும்கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துவிட்டது.ரவுடிகள் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் இருந்த ஏராளமான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.போதைப் பொருள் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது.நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.குற்றங்களில் ஈடுபட்டு ஜாமினில் வெளியே வந்தவர்களையும், பழைய குற்றவாளிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வரும் ஆண்டிலும் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர்கள் சண்முகம் சுஹாசினி, சந்தீஷ், ராஜராஜன் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் மதிய விருந்து அளித்தார்.