இனி இந்தியர்கள் விசா இல்லாமல் ஈரான் பயணிக்கலாம்..!!

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அறிவித்தது.

அதன் அடிப்படையில் நான்கு நிபந்தனைகள் அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசா இல்லாமல் ஈரான் செல்ல முடியும். அவர்கள் அதிகபட்சமாக 15 நாட்கள் அங்கு தங்கியிருக்கலாம்.