கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேரிடம் என்.ஐ.ஏ சூப்பிரண்டு நேரில் விசாரணை

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடிப்புசம்பவம் நடந்தது. இதில் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷாமுபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை என். ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் முகமது அசாருதீன் அப்சர் கான், பிரோஸ் கான், முகமது தவ்பிக் ,ஷேக் இதயத்துல்லா ,சனோபர் அலி, முகமது நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் 7நாட்கள் காவலில் எடுத்து கோவை அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் 7 பேரிடமும் நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் வைத்து என். ஐ. ஏ. சூப்பிரண்டு ஸ்ரீஜித் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.