போலீஸ் அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் விருது

கோவை : முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 138 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் முதல் அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .இதில் கோவை நகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் ஜி. கார்த்திகேயன், சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பார்த்திபன், ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் இளங்கோவன், குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், நுண்ணறிவு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், ரத்தினபுரி சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சரவணம்பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணி, குனியமுத்தூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் பரமகுரு பாண்டி, காட்டூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் வி கிரிசாமி, பயங்கரவாத தடுப்பு படை தலைமை காவலர் விமல் குமார் ,பெரிய கடை வீதி தலைமை காவலர் டி ஜெயக்குமார் ,குற்ற பதிவேடு கூடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், போலீஸ் பயிற்சி சிறப்பு இன்ஸ்பெக்டர் கோமதி ஆகிய 13 பேர் முதல் அமைச்சர் விருது பெறுகிறார்கள். இந்த தகவலை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கே. மணிவாசன் தெரிவித்துள்ளார்.