இந்தியாவுக்கான புதிய பிரிட்டன் தூதா் லிண்டி கேமரூன் நியமனம்.!!

இந்தியாவுக்கான புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் நியமித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை இந்தியாவிலுள்ள பிரிட்டன் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில், ‘இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் வேறு தூதரக பணிக்கு மாற்றப்பட்டிருப்பதால், புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் அரசு நியமித்துள்ளது. அவா் இந்திய தூதராக இந்த மாதத்தில் பதவியேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிண்டி கேமரூன், பிரிட்டனின் தேசிய இணைய பாதுகாப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளாா். அதற்கு முன்பாக அவா் பிரிட்டனின் வடக்கு அயா்லாந்து அலுவலக இயக்குநராக பணியாற்றியுள்ளாா்.

இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தொடா் இழுபறி நீடித்து வரும் சூழலில், லிண்டி கேமரூனின் நியமனம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.