கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து- பஸ்சில் சிக்கி இருவர் பலி…

கோவை ஜூலை 2 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பக்கம் உள்ளஅரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி.இவரது மகன் கார்த்திக் (வயது 32 )இவர் கோவையில் உணவு சப்ளையராக (சுவிகி)வேலை பார்த்து வந்தார்.கோவை காந்திபுரம்- சத்தி ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார் .ஆம்னி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார் இது குறித்து கோவை கிழக்கு பகுதிபோக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது . இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள சுல்தானிய புரத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் முருகானந்தம் (வயது 49 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதே போல நீலாம்பூர், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் சீனிவாசன் (வயது 23) இவர் ஒண்டிப்புதூர் ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை இவர் முந்த முயன்றார். அப்போது பஸ் மீது பைக் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் இறந்தார்..இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வ போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..