கடையின் பூட்டை உடைத்து பணம்,சிகரெட் பண்டல்கள் திருட்டு..!

கோவை பீளமேடு ,கோல்டு வின்ஸ்,வீரியம் பாளையம் ரோட்டில் உள்ள ஜூபிலி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவர் கடையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள்,பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து பீளமேடு போலீசில் வியாபாரி முருகேசன் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..