தூங்கும் போது தலையில் கல்லை போட்டு அடையாளம் தெரியாத முதியவர் படுகொலை-போலீசார் விசாரணை..

கோவை: வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் எதிர்புறம் 2 மாடிகள் கொண்ட ஒரு பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.அந்தக் கட்டடத்தின் கீழ் பகுதியில் இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.தலையில் பலத்த காயம் இருந்தது.உடல் அருகில் ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது.தூங்கும் போது யாரோ அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது.அவருக்கு 50 வயது இருக்கும்.பனியன் மட்டும் அணிந்து உள்ளார்.அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை.இதுகுறித்து ஆர் .எஸ். புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது..போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.