இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, வெள்ளி கொள்ளை-கோவையில் துணிகரம்..!

கோவை : சென்னை பெரம்பூர் கோவிந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38 ) இவர் துடியலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். என். ஜி.ஜி.ஓ.காலனி, வி.கே.வி நகரில் தங்கி உள்ளார் . கடந்த, மாதம் 21- ஆம் தேதி வீட்டை பூட்டி குடும்பத்துடன் சென்னைக்குச் சென்று இருந்தார் .நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் , 2 வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.