எல்லன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். ராமச்சந்திரன் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி-கோவை முதன்மை நீதிமன்றம் உத்தரவு ..!

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி பி .சிக்னல் அருகே எல்லன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் .இவர் இந்த ஆஸ்பத்திரியை சென்னையை சேர்ந்த டாக்டர்.உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார் .இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென்று30 பேர் கொண்ட கும்பல் இந்த ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஆஸ்பத்திரியை சூறையாடிவிட்டு தப்பி சென்றது. இது குறித்த புகாரின் பேரில் உமா சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியேவந்ததும், அவர் கார் விபத்தில்மர்மமான முறையில் பலியானார். இந்த வழக்கு சிபி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டது .இதை யடுத்து போலீசார்நடத்திய விசாரணையில் டாக்டர். ராமச்சந்திரன் கூலி படையை ஏவி தாக்குதல் நடத்திமருத்துவமனையை அபகரித்துக் கொண்டது தெரிய வந்தது . இதை தொடர்ந்து டாக்டர் ராமச்சந்திரன் ,டாக்டர். காமராஜ் உதவியாளர் முருகேஷ் மற்றும் மூர்த்தி, பழனிசாமி 5 பேர் கைது செய்யப் பட்டனர் .தற்போது வரை இந்த வழக்கில் 14 பேர் கைதாகி உள்ளனர். இதற்கிடையே டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ், உட்பட 5பேரும் ஜாமின் கேட்டு கோவை  மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்து நீதிபதி 5 பேரின் ஜமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.