உதகை பெரிய பள்ளிவாசலில் புனித ரமலான் பண்டிகை – இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை 40 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமிய பக்தி முயற்சியை ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொழுகை செய்து 40 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்களின் ரமலான் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகைகள் உதகை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொழுகையில் கலந்து கொண்டனர். சிறப்பு செய்தி வழங்கப்பட்டு, வந்த அனைவருக்கும் பிரார்த்தனைகள், ஏர் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதகையில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் இரண்டாயிரத்துக்கு மேலானவர்கள் கலந்து கொண்டனர். தொழுகை பிரார்த்தனை நிறைவாக ரமலான் புனித பண்டிகையை வாழ்த்தும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை சமாதானத்தையும் அன்பையும் பரிமாறிக் கொண்டனர்.தங்களது இல்லத்தில் உள்ள உறவினர்களுக்கும் ரமலான் புனித வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு, புனித ரமலான் பண்டிகை சிறப்பான விருந்தோம்பல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடும்பத்துடன் கூடி விருந்தில் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினர்..