திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் போஸ்டர் கிளிப்பு – மேயர் காரணமா..?

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிசம்பர் 2ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸின் 47வது பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. தற்போது அந்த போஸ்டர்களை மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்களை வைத்துக் கிழித்து, அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் பிறந்தநாள் போஸ்டரையே கிழிக்கும் அளவுக்கு என்ன நடந்தது திருச்சி திமுகவின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெற்கு மாவட்டமாகவும் அமைச்சர் நேரு மத்திய மாவட்டமாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இவர்களுக்குள் போட்டி பொறாமை அதிகமாகிக் கொண்டே இருந்தது . அமைச்சரின் பிறந்தநாள் போஸ்டர்
திருச்சி மேயர் அன்பழகனின் தூண்டுதலில்தான் இந்தப் போஸ்டர்கள் கிழிக்கப்படுவதாக எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது எனப் பேசத் தொடங்கினர். திருச்சி மாநகராட்சி தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்ற அன்பழகன் தி.மு.க தலைமையால் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் பெரும்பாலான கவுன்சிலர்கள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஆதரவாளர்கள்தான். அமைச்சரின் ஆதரவினால் மேயரான அன்பழகன் தற்போது அமைச்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது எங்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
கிழிக்கப்படும் போஸ்டர்கள்:
அதுமட்டுமல்ல, இதுவரை திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட மற்ற எந்த போஸ்டர்களும் கிழிக்கப்பட்டதே இல்லை. அப்படியிருக்கும்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் போஸ்டர்கள் மட்டும் கிழிக்கப்படுவது யாரையோ திருப்திப்படுத்த அன்பழகன் செய்யும் தேவையில்லாத அரசியல் என்றே தோன்றுகிறது. இதன்மூலம் திருச்சியில் தேவையில்லாத கோஷ்டி மோதல் உருவாகும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
திருச்சி மேயர்:
மற்றொரு புறம் சட்டமன்றத் தேர்தலுக்குத் தலைமை தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் மேயர் அன்பழகனின் இந்தச் செயல் திருச்சி தி.மு.க-வில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கொதிக்கிறார்கள். இது குறித்து மாநகராட்சி தரப்பில் கேட்டால் இதில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்கிறார்கள் அப்படி என்றால் அமைச்சர் உடைய போஸ்டரை கிழிக்கச் சொன்ன நபர் யார் இது கண்டிப்பாக திருச்சி மேயர் அன்பழகன் செய்த சதிதான் என்கிறார்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் எப்படியோ திருச்சி திமுகவில் மீண்டும் கோஷ்டி மோதல் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது.