21 மாநகராட்சிகளின் மேயர்கள் – முழு விவரம் இதோ…

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில், 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

சென்னை , தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களில் மேயர், துணை மேயர் ,நகராட்சி தலைவர் ,துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையை பொருத்தவரை திருவிக நகர் 21வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரியா சென்னை மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்றுள்ளார். இதுதவிர பல மாநகராட்சிகளில் மேயர் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி வருகின்றனர். அவை பின்வருமாறு :-

ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார் போட்டியின்றி தேர்வு – அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஆணையர் செங்கோல் வழங்கினர்.

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி..

திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவின் அன்பழகன் போட்டியின்றி தேர்வானார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விசிகவை சேர்ந்த சுமதி போட்டியின்றி தேர்வானார்

வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுகவின் ஜெகன் போட்டியின்றி தேர்வானார் திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி

சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் இராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வானார்

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி – எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி – எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி

திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவின் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வானார்.

சிவகாசி மாநகராட்சி மேயரானார் சங்கீதா இன்பம்

ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி -பரபரப்பாக நடந்த தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர்.

நெல்லை மேயராக சரவணன் ,வேலூர் மேயராகமேயர் சுஜாதா, கரூர் மேயராக கவிதா கணேசன், கோவை மேயராக கல்பனா, ஈரோடு மேயராக நாகரத்தினம், காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி, கும்பகோணம் மேயராக சரவணன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .

பேரூராட்சி & நகராட்சி

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமார் தலைவராக தேர்வு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சித் தலைவராக விசிக உறுப்பினர் அமுதலட்சுமியைப் போட்டியின்றித் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சி தலைவராக சுயேச்சை வேட்பாளர் பில்கான்,கோதநல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவின் கிறிஸ்டல்

குமாரபுரம் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் கிறிஸ்டோர், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவராக திமுகவின் ஹாரூன் ஆகியோர் தேர்வு

தர்மபுரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவின் தேவராஜ் போட்டியின்றி தேர்வு

பொள்ளாச்சி நகராட்சியில் திமுக வேட்பாளர் ஷாமிலா நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக திமுகவின் சண்முகப்பிரியா செந்தில்குமார் தேர்வு

மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவின் சுதா பாஸ்கரன் வெற்றி – மொத்தமுள்ள 27 வார்டில் திமுக மற்றும் அதிமுக தலா 11 இடங்கள், சுயேச்சைகள் 5 இடங்களில் வென்ற நிலையில், மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் 15, திமுக வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றனர்