இயற்கை பேரிடரை எதிர் கொண்ட தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மொத்தம் 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது.
இந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக வழங்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆந்திராவுக்கு 351.43 கோடி ரூபாயும், இமாச்சல் பிரதேசத்துக்கு 112.19 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 492.39 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவுக்கு 355.39 கோடி ரூபாயும், தமிழகத்துக்கு 352.85 கோடி ரூபாயும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 17.86 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
Leave a Reply