11 ,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் பாடம் வாரியாக அறிவிப்பு.!!

சென்னை : தமிழகத்தில் 10, 11 ,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

12ம் வகுப்பு, 11ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆகியவற்றுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ம் வகுப்புக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மே 5 – மொழிப்பாடம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு

மே 9 – ஆங்கிலம்
மே 11 – கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல் அறிவியல்
மே 13 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 17 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல், நர்சிங் தொழில்பாடம் , பொதுப்பாடம்
மே 20 – இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மே 23 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல்
மே 28 – தொழிற்பாடத் தேர்வு

11ம் வகுப்பு பொதுத்தேர்வு:-

மே 10 – மொழிப்பாடம்,
மே 12 – ஆங்கிலம்
மே 16 – தாவரவியல், வரலாறு, உயிரியல், வணிக கணிதம், புள்ளியியல்
மே 19 -வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 25 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங்
மே 27- புள்ளியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல்
மே 31-இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம்