தனியார் பள்ளிகளுக்கு இணையாக மலை கிராம அரசு பள்ளி… 10 ம் வகுப்பு மாணவர்கள் 95 % தேர்ச்சி பெற்று அசத்தல்.!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி. இந்த மலை கிராமத்தில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர் கல்வி படித்து செல்கின்றன. சுற்றிலும் மலைப் பகுதி தொடர் மழை, மிகுந்த குளிர், சீரான சாலைகள் இல்லாத நிலை, அடிக்கடி மின் நிறுத்தம், ஆடலூர், பன்றிமலை போன்ற மலை கிராமங்களில் சரிவர பேருந்து வசதிகளும் கிடையாது. இது போன்ற கால சூழ்நிலையில் படித்து செல்லும் மாணவர்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே வந்து படித்து செல்கின்றன. இந்நிலையில் நகரத்தில் படிக்கும் மாணவர்களை விட மலை கிராம பள்ளியில் பயன்ற 21
மாணவர்களுக்கு 20 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளது மிகவும் சிறப்பு. இந்த தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 426 மதிப்பெண் எடுத்து ஸ்ரீதரன் என்ற மாணவர் பள்ளியில் முதல் இடத்திலும், 404 மதிபெண் பெற்று சந்தோஷ் ஸ்ரீராம் இரண்டாம் இடத்திலும், 397 மதிபெண் பெற்று ஹரி விக்னேஷ் என்ற மாணவர் 3 ம் இடத்தையும் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதி மலை கிராம மக்கள் இதற்க்காக கல்வித் துறை, தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அனைத்து மாணவ – மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மலை கிராம அரசு பள்ளி 10 ம் வகுப்பு மாணவர்கள் 95 % தேர்ச்சி பெற்றது அரசு பள்ளிகள் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது..