மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம்.!!

துரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் தேரில் மீனாட்சி – சுந்தரேஷ்வர் பவனி வருகிறார்கள்.லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்..

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4
ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்
கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்டவை மிக முக்கிய நிகழ்வாகும்.

12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இதன் படை சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான சனிக்கிழமை தங்க சப்பரத்தில் பிட்சாடன கோலத்தில் பிச்சாண்டி சுவாமி வீதி உலா வந்தார்.

இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவில் 8 ஆம் நிகழ்வில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார். மே 2ம் தேதி பிரம்மாண்டமான மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக் கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை உணவு மதுரை சேதுபதி பள்ளியில் தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. தேர் முட்டில் இருந்து மீனாட்சி மற்றும் சுந்தரேஷ்வர் ஆகியோர் தேரில் மாசி வீதிகளை வலம் வந்தனர். தேரை பின் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.