வாலிபரிடம் விபசார அழைப்பு. 2 பெண்கள் கைது.

கோவை புது சித்தாபுதுரை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 21) .இவர் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் 2 பெண்கள் விபசார அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நந்தகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சிவானந்தா காலனியை சேர்ந்த மும்தாஜ் (வயது 50) சூலூர்,காரணம்பேட்டை பக்கம் சின்ன கோடங்கிபட்டிபாளையத்தை சேர்ந்த பிரியா ( வயது 35)ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.