ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் திருட்டு.

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், வசந்தம் நகர், ராமச்சந்திரா வீதியை சேர்ந்தவர் சுப்ரமணி. அவரது மனைவி ராஜலக்ஷ்மி ( வயது 59 )நேற்றுஇவர் ஒத்தக்கால் மண்டபத்தில் இருந்து டவுன்ஹாலுக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் இருந்து இறங்கினார்..அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை காணவில்லை. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தில் யாரோ திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி கடை வீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..