பயணிகள் கவனத்திற்கு… கோவை ரெயில் வடகரை-கன்னூா் இடையே பகுதியாக 8 நாட்களுக்கு இயக்கப்படாது..!

கோவை-கன்னூா் ரெயில் வடகரை – கன்னூா் இடையே பகுதியாக ரத்து
செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம்
கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் கன்னூா் அருகே உள்ள எடக்கோட் – கன்னூா்
இடையே ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இதனால் இன்று முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 8 நாள்கள்
கோவையில் இருந்து மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் கோவை – கன்னூா்
தினசரி விரைவு ரெயில் (எண்: 16608) கோவையில் இருந்து வடகரை வரை மட்டுமே
இயக்கப்படும். இந்த ரெயிலானது மேற்கண்ட 8 நாள்களில் வடகரை- கன்னூா் இடையே
இயக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.