தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை- கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சின்ன கள்ளிப்பட்டி ஏ.டி காலனியை சேர்ந்தவர் மாகாளி கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சிவராஜ் இவரும் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மாகாளியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மாகாளி, சிவராஜ் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் மாகாளி மது அருந்திவிட்டு மருமகனிடம் மருமகளிடம் எனது மகன் எனக்கு சாப்பாடு மற்றும் மது அருந்த பணம் கொடுப்பதில்லை எனக் கூறி அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி மாகாளி தனது மருமகளிடம் மது அருந்த பணம் கேட்டு உள்ளார். அவர் மறுத்ததால் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றவர். இறச்சி வாங்கி வந்து சமைத்துக் கொடுக்க கூறி மீண்டும் தகராறு செய்து உள்ளார். இதை அடுத்து வீட்டிற்கு வந்த சிவராஜிடம் அவரது மனைவி மாகாளி செய்த தகராறு குறித்து கூறியுள்ளார். இதை அடுத்து சிவராஜ், மாகாளியை அழைத்துச் சென்று மது அருந்து உள்ளார். அப்பொழுது தனது மனைவியிடம் தகராறு செய்தது குறித்து சிவராஜிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவராஜ், மாகாளியை வீட்டுக்கு அழைத்துச் சென்று தோசை கரண்டியால் மாகாளியின் தலை நெற்றியில் தாக்கி கொலை செய்துள்ளார். மேலும் அவருடைய சடலத்தை வீட்டுக்கு உள்ளேயே புதைக்க முயன்று உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை காவல் துறையினர் கொலை தடையங்களை அழிக்க முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவராஜ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி சசிரேகா தீர்ப்பளித்தார். இதில் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக சிவராஜிற்கு ஆயுள் தண்டனை ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்..