கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு ஆகஸ்ட் 26-க்கு ஒத்தி வைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொள்ளை வழக்கை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.