அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை- கோவையில் பரபரப்பு..!

கோவை சுகுணாபுரம் மைக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை அளித்ததால் பரபரப்பு.

மாநகர உதவி காவல் ஆணையாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் இருந்து மாணவிகள் அழுதபடி வெளியே வருவது அங்குகூடி இருந்தவர்களை மனதை வெகுவாக பாதிக்கப்பட்டது.

பிராபகரன் இந்த பள்ளிக்கு வந்து மூன்று நாட்களே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.