கொடநாடு கொலை வழக்கு: போன் அழைப்பு விவரங்கள் சேகரிக்கும் சி.பி.சி.ஐ.டி..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், பிஜின், சந்தோஷ் சாமி உட்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இது தொடர்பாக தனிப் படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவையில் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் செல்போனில் பேசிய உரையாடல்கள் கைப்பற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக போன் அழைப்புகள் விவரங்களை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல் மொபைல் சேவை தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். பின்னர் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்த பின்னர் கைதான பத்து பேர் யாரிடம் எல்லாம் பேசி உள்ளனர். என்பது குறித்து போன் அழைப்பு விவரங்களை சேகரித்தனர். டேப் பதிவு விவரங்களாக சேகரித்து. பின்னர் அவற்றை பெற்று விட்டு திரும்பினார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது :-

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதானவர்கள் யாரிடம் எல்லாம் பேசினார்கள் என்பது குறித்து அழைப்பு விவரங்கள் டேப் பதிவு விவரங்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் அவர்கள் பேசிய விவரங்களை கண்டுபிடிக்க ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது கண்டுபிடிக்கப்படும் என்றனர்.