குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவுப்படி சார்பு ஆய்வாளர் பாரத நேரு போலீசார் முருகன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை எட்டிமடை கம்பர் வீதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மொபட்டில் ஒருவர் ரேஷன் அரிசியை கடத்துவதற்கு தயாராக இருந்தார். அவரை மடக்கி பிடித்து அவர் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடையுள்ள 21 சாக்குமூட்டையில் 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர் . இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவகுமார் 38 என்பவரை கைது செய்தனர்.
Leave a Reply