திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் 1980 ஆம் ஆண்டு வேளாண்மை பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. இதில் முதலாமாண்டு பயிற்சிக்கு சேர்ந்த 60 மாணவ ,மாணவிகள் இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்து 1982இல் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றனர். பின்னர் 40 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முதலாக மீண்டும் சந்திப்போம் என நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் காந்திகிராம பல்கலைக் கழக கேவிகே வேளாண் அறிவியல் மையத்தில் கூடினர். இந்த சந்திப்பில் 65 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தற்போது 60 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிப்பை முடித்த பின்னர் பலர் தமிழக வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர் பணியில் சேர்ந்து இணை இயக்குனர், உதவி இயக்குனர் வரை பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள். சிலர் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை அலுவலக பணியில் சேர்ந்து வங்கி மேலாளராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்கள்.இன்னும் ஒரு சிலர் வேளாண்மை சார்ந்த வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள் இந்த சந்திப்பில் பலர் பேரன் பேத்தியுடன் வந்திருந்தனர் தாங்கள் 40 ஆண்டுக்கு முன் படித்த அனுபவத்தை பகிர்ந்து போது சிலர் கண்ணீர்விட்டும் தங்களது நண்பர்களை அடையாளம் காண்பதில் ஒரு பெரும் படத்தையும் காண முடிந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் ரங்கநாதன் பேசும்போது…. முன்னாள் மாணவர்கள் தாம் படித்த அதே துறைசார்ந்த துறையில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நீங்கள் வழிகாட்டியாகவும் தொழில் முனைவோராக மற்றும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பதிவாளர் சிவகுமார், முன்னாள் பேராசிரியர்கள் குருவம்மாள், கோபால், உதயகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் சிறுதானியங்களில் தயார் செய்த பல வகையான உணவுகளை மதியம் வழங்கப்பட்டது…
Leave a Reply