சென்னை நகரில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கடந்த நவம்பர் மாதம் அதிகரிப்பு:117 பேர் மீது கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை.

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 29ம் தேதி வரை சென்னை நகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 434 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 104 குற்றவாளிகளும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 77 பேரும், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், பாலியல் தொழில் நடத்திய 13 பேர்,பெண்களை மானபங்கம்படுத்திய 4 பேர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 639 குற்றவாளிகள் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் 7 நாட்களில் 24 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 49 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதுவே இந்த ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 117 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் குண்டர் சட்ட நடவடிக்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.