கோவையில் கரடி தாக்கி ஜார்க்கண்ட் மாநில பெண் காயம்: கரடியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை

கரடி தாக்கி ஜார்க்கண்ட் மாநில பெண் காயம்: கரடியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காரடிகளின் நடமாட்டம் அதிகரித்து ஆங்காங்கே பொதுமக்களையும் தாக்கி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் இன்று அதிகாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சபீதா வயது 19 தனது குடியிருப்பு அருகே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார் அப்போது அப்பகுதி தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளிவந்த இரண்டு கரடிகள் திடீரென மூர்க்கத்தனமாக இவரின் இரண்டு கைகளையும் தாக்கியுள்ளது இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டிவந்த குடியிருப்பு வாசிகள் சத்தம்கரடியை விரட்டி காயமடைந்தவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இஞ்சிப் பாறைப் பகுதியில் காரடிகளின் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வருவதால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கரடிகளை பிடித்து அப்பகுதியிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்